சுதந்திர போராட்ட தலைவர்கள், சாதி தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளதாக, தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் முதல் இந்திய சுதந்திர போர் பிரகடனம் என்று சொல்லப்படும் ஜம்புத்தீவு பிரகன நினைவு நாள் மற்றும் அறியப்படாத தமிக சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி ஆய்வுகள் நடத்தியவர்களை கவுரவிக்கும் நிகழ்வு ஆளுநர் ஆர். என்.ரவி தலைமையில் = நேற்று நடைபெற்றது.
விழாவில் சுதாந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்தும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் எழுதிய 89 ஆய்வு நூல்களை ஆளுநர் வெளியிட்டார். இந்நிகழ்வில் பேசிய ஆளுநர் “ இந்த நாளில் மருது சகோதரர்கள் பற்றி நினைவுகூர்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. 1801ம் ஆண்டு ஜம்பு தீவு பிரகடனம் மூலம் ஐரோப்பியர்களை எப்படி விரட்ட வேண்டும் என மருது சகோதரர்கள் தெரிந்து வைத்து இருந்தனர்.
இந்த பிரகடனம் மூலம், சாதி, மதம் கடந்து அனைவரையும் ஒன்றிணைத்து ஐரோப்பியர்களை மருது சகோதரர்கள் வெளியேற்ற முடிவு செய்தனர். பல உண்மையான சுதந்திர போராட்ட வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. தற்போது சுதந்திர போராட்ட தலைவர்கள் சாதி தலைவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். “ என்று அவர் கூறினார்.