விஜயகுமார் ஐ.பி.எஸ். ராஜினாமாவா? பணிக் காலம் நிறைவு பெற்றதாக பேட்டி

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக்கின் ஐந்து ஆலோசகர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் அவரது பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரது பணிகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

By: Updated: October 31, 2019, 12:07:06 PM

ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக்கின் ஐந்து ஆலோசகர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார் பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரது பணிகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

1975 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் அதிகாரியான விஜயகுமார் ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பதில் ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு உதவ 2018 இல் நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசியலமைப்பு சட்டம் 370வது பிரிவை திருத்தம் செய்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அங்கே பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக்கின் ஆலோசகர்களாக இருந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ்.அதிகாரி விஜயகுமாரும் ஒருவர்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.விஜயகுமார், அவரது பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரது ஆலோசகர் பணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

இது குறித்து விஜயகுமார் கூறுகையில், “நான் ராஜினாமா செய்யவில்லை, ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராக எனது பதவிக்காலம் முடிந்தது. ஸ்ரீநகரில் நாளை நடைபெறும் புதிய துணை நிலை ஆளுநர் பதவியேற்பு விழாவில் நாளை பங்கேற்பேன். அதன் பிறகு நான் திரும்பி வருவேன். மீண்டும் நியமன்ம் பற்றி ஊகங்கள் வேண்டாம். ”என்று என்று தெரிவித்துள்ளார்.

இன்று அக்டோபர் 31 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக நடைமுறைக்கு வருகிறது.

கடந்த வாரம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக்கை கோவா ஆளுநர் மாற்றம் செய்து உத்தரவிட்டார். செலவுத் தொகுதி செயலாளராக பணியாற்றி வந்த 1985 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியான கிரிஷ் சந்திர முர்முவை மத்திய அரசு ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநராகவும், 1977 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வாகி தற்போது ஓய்வுபெற்ற ஐ.ஏஎஸ் அதிகாரி ராதா கிருஷ்ணா மதுர்-ஐ லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமித்தது.

சத்யபால் மாலிக்கின் ஆலோசகர்களாக இருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான குர்ஷித் ஏ.கனாய், கே.கே. சர்மா, கே. ஸ்கந்தன், பாரூக் கான் ஆகியோர் கிரிஷ் சந்திர முர்முவுக்கு மிகவும் சீனியர்கள் என்பதால் மூத்தவர்கள் என்பதால் அவர்கள் பதவிகளில் தொடர்வது என்பது ஒரு கேள்விக்குறியாகி உள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Jammu kashmir governors adviser retired ips officer vijay kumar to be relieved of services on end of his term

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X