ஜன கன மன எனத் தொடங்கும் தேசிய கீதத்தை ‘நாட்டுப்புற பாடல்’ என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதாக வைரல் வீடியோ பரவி வருகிறது. அதே சமயம் அதற்கு மறுப்பும் வெளியாகிறது.
ஸ்டாலினை விட்டா ஜன கன மன நாட்டுப்புற பாடலை பாடியது விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்னு சொல்லுவாப்ல ???????? pic.twitter.com/a24js47TRX
— Raja Rajan (@psrajarajan) January 27, 2018
’ஜன கன மன’ எனத் தொடங்கும் பாடல், இந்தியாவின் தேசிய கீதம்! இதனை நாட்டுப் பண் என்றும் குறிப்பிடுகிறோம். நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற விழாவில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதத்தை ‘நாட்டுப்புற பாடல்’ என தவறுதலாக குறிப்பிட்டதாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.
சீர்காழி விழாவில் பேசிய ஸ்டாலின், ‘தமிழ்த் தாய் வாழ்த்து பாடுகிற போது எழுந்திருக்க முடியாதவர்கள், நாட்டுப்புற பாடல் ஜன கன மன பாடும்போது எழுந்திருக்கிறார்கள்’ என குறிப்பிட்டதாக வைரல் வீடியோ பரவி வருகிறது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டபோது காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்திருக்காமல் அமர்ந்தது குறித்து விமர்சிக்கும்போதே வாய்தவறி ஸ்டாலின் அப்படி பேசியதாக கூறப்பட்டது.
கம்ப ராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் #EPS
"ஜன கன மன" நாட்டுபுறப்பாடல் #MKS
சிறப்பான முதல்வர் & மிக சிறப்பான எதிர்கட்சி தலைவர்????????#TNPolitics— ElavarasanThangasamy (@ela_twittz) January 27, 2018
ஜன கன மன பாடலை நாட்டுப்புற பாடல் என ஸ்டாலின் பேசியதாக கூறப்பட்ட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. ஆனால் வேறு சிலரோ, ‘நாட்டுப் பண் பாடல்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டதாக விளக்கமும் கொடுத்து வருகிறார்கள். ஸ்டாலின் மாற்றிப் பேசியதாக முதலில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் பிறகு அதற்கு மறுப்பும் வெளியிட்டன.
நாட்டுப்பண் பாடல் ஜனகனமன அப்படி தானே சொல்றார்.... pic.twitter.com/8XFbRpvspp
— ஒற்றன் (@Mukamooodi) January 27, 2018
ஏற்கனவே நீட் தேர்வையொட்டி உயிர் நீத்த அனிதா பெயரை மாற்றிக் குறிப்பிட்டதாகவும் இன்னொரு நிகழ்ச்சியில் குடியரசு தின தேதியை மாற்றிப் பேசியதாகவும் ஸ்டாலினின் மேடைப் பேச்சு சர்ச்சை ஆனது. இப்போது இந்த ஜன கன மன விவகாரம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.