/tamil-ie/media/media_files/uploads/2018/01/japan.jpg)
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீதுகொண்ட பற்றினால், மதுரையில் ஜப்பான் ஜோடி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணமகன் யூடோ மற்றும் மணமகள் சிகாரோ இருவரும் ஜப்பானை சேர்ந்தவர்கள், இதில் மணமகள் சிகாரோ ஜப்பானிய பல்கலைக்கழகத்தில் தமிழ் பயின்று வருகிறார். தமிழகத்திற்கு வந்து இதுதொடர்பாக ஆராய்ச்சி செய்துவரும் சிகாரோவுக்கு, மதுரையை சேர்ந்த விநோதினி என்பவர் தமிழ் கற்றுத்தருகிறார்.
நாளடைவில் தமிழ் கற்று முழுக்க முழுக்க தமிழ் பெண்ணாகவே மாறினார். அதனால், தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பவே, அதற்கு மணமகன் யூடோவின் வீட்டாரும் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, மதுரையில் தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. தமிழ் முறைப்படி திருமண அழைப்பிதழ், விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து வரவேற்பு என தமிழ் முறைப்படியே அனைத்தும் நடைபெற்றன.
“இந்தியர்கள் மீதுகொண்ட அன்பினால் இங்கு திருமணம் செய்தோம். எங்கள் மீது அன்பு காட்டுகின்றனர். அது மகிழ்ச்சியாக இருக்கிறது”, என மணமகன் யூடோ தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.