Advertisment

சமூக அமைதியை சீர் குலைக்கவே பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்பு; ஜவாஹிருல்லா கண்டனம்

தமிழகத்தில் பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்திருப்பது சமூக அமைதியை குலைக்கும் செயல் ஜவாஹிருல்லா கண்டனம்

author-image
WebDesk
New Update
சமூக அமைதியை சீர் குலைக்கவே பூணூல் அறுப்பு போராட்ட அறிவிப்பு; ஜவாஹிருல்லா கண்டனம்

Jawahirullah condemns Poonol slaughter struggle in Tamilnadu: தமிழகத்தில் பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்திருப்பது சமூக அமைதியை குலைக்கும் செயல் என மனித நேய மக்கள் கட்சி தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கும் கர்நாடக பாஜக அரசை எதிர்த்து இந்துக்கள், கிறிஸ்தவர்கள், எழுத்தாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் உட்பட அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் இந்துக்கள் தமது குழந்தைகளுக்கு ஹிஜாப் அணிவித்து புகைப்படம் எடுத்து பதிவேற்றி ஆதரவு தெரிவிக்கின்றனர். ஹிஜாப் வழக்கில் வாதாடியவர்களில் பிராமணர் சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் இருந்தார் என்பதே இங்கு சமூக நல்லிணக்கம் நிலைத்து நிற்பதற்கான சாட்சியாக உள்ளது.

இதையும் படியுங்கள்: ‘உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் நடத்தவில்லை’ அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

இந்தச் சூழலில் பூணூல் அறுக்கும் போராட்டம் என சிலர் அறிவித்திருப்பது சமூக அமைதியை சீர்குலைப்பதாக உள்ளது. பாசிச சங்பரிவார சக்திகளை அனைத்து சமூக மக்களும் ஹிஜாப் விவகாரத்தில் ஓரங்கட்டும் நல்ல சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூணூல் அறுக்கும் போராட்டம் என்று ஒரு சிலர் அறிவிப்பது கயமைத் தனமானது. சமூக அமைதியை சீர்குலைக்க கூடியது.

வெகு மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கு பதிலாக பகைமையை கூர் தீட்டும் இம்முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த அறிவிப்பு வன்மையான கண்டனத்துக்குரியது. அனைவராலும் புறந்தள்ள படவேண்டியது. மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu M H Jawahirullah
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment