தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் அறிவித்த ஜவாஹிருல்லா.. கோரிக்கை இதுதான்!

நீண்ட நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

நீண்ட நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jawahirullah has demanded the release of Islamic prison inmates

முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த ஜவாஹிருல்லா (கோப்புக் காட்சி)

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “நீண்ட நாள் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து, “தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று காணொலி வாயிலாக எனது தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கடந்த ஜூலை 9 அன்று கோவை மத்தியச் சிறை முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

தமிழ்நாடு அமைச்சரவை கூடி நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு வழிவகுக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது.

Advertisment
Advertisements

இப்போராட்டத்தின் இறுதியில் ஒரு மாதத்திற்குள் 36 நீண்ட கால முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லையெனில் தலைமைச் செயலகம் நோக்கி அடுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஒரு மாதம் கடந்த பிறகும் தமிழ்நாடு அரசு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தச் சூழலில் நீதியரசர் ஆதிநாதன் பரிந்துரையின் அடிப்படையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமுமுகவின் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் வரும் செப்டம்பர் 30 அன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதென இன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: