/indian-express-tamil/media/media_files/2025/09/27/jawahirullah-mh-latest-speech-tvk-vijay-tn-election-tamil-news-2025-09-27-18-51-58.jpg)
"மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தொடர்பான தகவல் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்." என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
"நடிகர் விஜய் சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமல் பேசுகிறார். நாகப்பட்டினம் ரயில் நிலையம் பனிமனை மாற்றப்பட்டது என்று சொல்கிறார். அது ஆங்கிலேயர் காலத்திலேயே திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. அதுக்கூட தெரியாமல் விளையாட்டு பிள்ளையாக பேசி வருகின்றார்" என்று இன்று விழுப்புரத்திற்கு வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்
விழுப்புரத்தில் இஸ்லாமிய பிரச்சார பேரவை விழாவில் பங்கேற்ற ஜவாஹிருல்லா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், "அண்ணா, பெரியார் குறித்து சீமான் நாகரிமல்லாமல் பேசுகிறார். அவர் இன்று கல்லூரியில் படித்து பட்டம் வாங்கியுள்ளார் என்றால் அதுக்கு திராவிட கட்சிகள் தான் காரணம். விஜய் வரவால் தி.மு.க கூட்டணிக்கு பாதிப்பு இல்லை. பாதிக்கப்படுவது அ.தி.மு.க-வும், பா.ஜ.க-வும் தான். எங்கள் கூட்டணி விரிசலுக்கு வாய்ப்பில்லை. பலமாக கூட்டணியாக நாங்கள் உள்ளோம்.
தம்மைச் சுற்றி என்ன நடக்குது என்று தெரியாமல் பேசுகிறார் விஜய். நாகப்பட்டினம் ரயில் நிலையம் பனிமனை மாற்றப்பட்டது என்று சொல்கிறார் விஜய். ஆங்கிலேயர் காலத்திலேயே திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. அதுக்கூட தெரியாமல் விஜய் பேசுகின்றார். விளையாட்டு பிள்ளையாக பேசி வருகின்றார்.
மனிதநேய மக்கள் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட தொடர்பான தகவல் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். அங்கீகாரம் ரத்து என்பது சட்டவிரோத செயல். அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் உரிமை தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. தேர்தலை நடத்த மட்டும் தான் தேர்தல் ஆணையத்திற்கு உரிமை உண்டு" என்று அவர் கூறினார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநிலச் செயலாளர் முஸ்தகத்தீன், மாநில வர்த்தக அணி பொருளாளர் அப்துல் ஹக்கீம், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் அசல் முகம்மது புதுவை மாவட்ட தலைவர் சகாபுதீன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சையது உஸ்மான், அப்பாஸ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - விழுப்புரம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.