/indian-express-tamil/media/media_files/2025/10/23/jawan-2025-10-23-05-47-52.jpg)
உயிரிழந்தவர், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி அருகே கடும்பிருத்தியைச் சேர்ந்த நாயக் எஸ்.சானு என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இந்த விமானப்படைத் தளத்தில் டி.எஸ்.சி காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
Arun Janardhanan
பாதுகாப்புப் படை வீரர் நாயக் எஸ்.சானு, தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். அண்மைக் காலமாக அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மனைவி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூர் விமானப்படைத் தளத்தில், பாதுகாப்புப் படைப் பிரிவைச் (டி.எச்.சி) சேர்ந்த 47 வயது ராணுவ வீரர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தற்கொலை செய்துகொண்டார்.
உயிரிழந்தவர், கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி அருகே கடும்பிருத்தியைச் சேர்ந்த நாயக் எஸ்.சானு என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அந்த விமானப்படைத் தளத்தில் டி.எஸ்.சி காவலராகப் பணிபுரிந்து வந்தார்.
காவல்துறை தகவலின்படி, விமானப்படைத் தளத்தின் 13வது கோபுரப் பணியில் (13th tower post) இருந்தபோது, காலை 6:10 மணியளவில் அவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. திடீரெனக் கேட்ட துப்பாக்கிச் சத்தத்தால் அதிர்ச்சியடைந்த சக வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, சானு துப்பாக்கி அருகே ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டனர்.
விமானப்படை காவல் துறையினரும், சூலூர் உள்ளூர் காவல்துறையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். பின்னர், சடலம் கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், அவரது குடும்பத்தினரிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
சானுவின் மனைவி, இந்துலேகா (42), சமீபத்தில் சில வாரங்களாகத் தனது கணவர் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தில் இருந்ததாகக் காவல்துறையிடம் தெரிவித்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர் சொந்த ஊருக்கு வந்திருந்தபோது, மனச்சோர்வுக்காக மருத்துவ உதவியை நாடினார். அப்போது அவருக்கு ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் பரிந்துரைக்கப்பட்டன. இருப்பினும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் மருந்தை நிறுத்திவிட்டு, அக்டோபர் 12-ம் தேதி மீண்டும் பணிக்குத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
“தான் மனரீதியாக நலமாக இல்லை என்று அவர் வீடியோ கால் மூலம் என்னிடம் சொன்னார்” என இந்துலேகா தனது வாக்குமூலத்தில் காவல்துறையிடம் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை 7:15 மணியளவில், சானுவின் சக ஊழியர்களில் ஒருவர், அவரது பணியிடத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாகவும், அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் தனக்குத் தகவல் அளித்ததாக இந்துலேகா கூறினார்.
இந்துலேகாவின் புகாரின் அடிப்படையில், இந்திய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 194 (தற்கொலை குறித்து காவல்துறை விசாரித்து அறிக்கை அளித்தல்)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
“தற்கொலைக்கான காரணம் தனிப்பட்ட மன உளைச்சலின் விளைவாகவே இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் வேறு எந்தத் தவறும் நடந்ததற்கான அறிகுறியும் இல்லை” என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். ராணுவப் படைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சானு, அதன் பின்னரே முக்கியமாகக் பாதுகாப்பு ஸ்தாபனங்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படைப் பிரிவில் (டி.எஸ்.சி) இணைந்தார்.
சூலூர் விமானப்படைத் தள அதிகாரிகள், இந்தச் சம்பவம் குறித்து விரிவான உள் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us