scorecardresearch

ஜெயக்குமார் சிறையில் அடைப்பு: என்னென்ன பிரிவுகளில் வழக்கு?

வாக்குச் சாவடி அருகே ஜெயக்குமார் மற்றும் அவரது ஆட்கள் தன்னைத் தாக்கியதாக நரேஷ் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Jayakumar arrested
Jayakumar arrested

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது திமுக பிரமுகரை’ தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், அதிமுக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், திங்கள்கிழமை மாலை சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

வடசென்னை ராயபுரத்தில் உள்ள வார்டு எண் 49-ன் தெருவில் தான் இந்த சம்பவம் நடந்தது. நரேஷ் என்று அடையாளம் காணப்பட்ட நபர், அதிமுகவினரால் கும்பலாகத் தாக்கப்பட்டு, அவரது கைகளை’ சட்டையால் பின்னால் கட்டி, இழுத்துச் செல்வது போன்ற வீடியோ  சனிக்கிழமை மாலை வைரலானது.

இந்த வன்முறை சம்பவத்தை ஜெயக்குமார் பேஸ்புக் நேரலையில் பகிர்ந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

திங்கள்கிழமை மாலை, தண்டையார்பேட்டை போலீஸார், ஜெயக்குமாரின் வீட்டுக்குச் சென்று, அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுகவினர் நுங்கம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாக்குச் சாவடி அருகே ஜெயக்குமார் மற்றும் அவரது ஆட்கள் தன்னைத் தாக்கியதாக நரேஷ் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அதிமுக கொடி ஏந்திய காரை வாக்குச் சாவடிக்கு கொண்டு வந்ததற்காக ஜெயக்குமாரிடம்’ நரேஷ் விசாரித்தபோது’ வாக்குவாதம் தொடங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்த நரேஷ்’ அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புகாரைத் தொடர்ந்து’ ஜெயக்குமார் மற்றும் குறைந்தது 40 அதிமுகவினர் மீது பிரிவுகள் 147 (கலவரம்), 148 (கொடிய ஆயுதத்துடன் கலவரம்), 294 (ஆ) (ஆபாசமான வார்த்தை), 153 (கலவரத்தை தூண்டும் வகையில் தூண்டுதல்), 355 (தாக்குதல்), 323 (காயப்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்களால் காயப்படுத்துதல்), 506 (ii) ஐபிசியின் (குற்றவியல் மிரட்டல்) மேலும் மூன்று பிரிவுகளின் கீழ்’ கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராயபுரம் போலீசார்’ அவர் மீது சிட்டி போலீஸ் சட்டம் தவிர, ஐபிசியின் பிரிவு 188 (அரசு ஊழியர் முறையாகப் பிறப்பித்த உத்தரவை மீறுதல்), 269, 270 (தொற்றுநோயைப் பரப்பும் அலட்சியச் செயல்) ஆகியவற்றின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களுக்காக தனி வழக்குப் பதிவு செய்தனர்.

ஜெயக்குமாரின் கார் ஓட்டுநரின் எதிர்ப் புகாரின் பேரில், அவரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஜெயக்குமாரின் டிரைவர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்பியுமான ஜெயவர்தன்’ பதிவு செய்த வீடியோவில்’ திங்கள்கிழமை இரவு ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் உள்ள ஜெயக்குமாரின் வீட்டிற்கு போலீஸார் வந்தபோது, ஜெயக்குமாரும், அவரது குடும்பத்தினரும் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். கைது வாரண்ட்டை காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவதனம் மற்றும் பிற போலீசார் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தங்களுக்கு ஒத்துழைக்க கோரிய போதிலும், அவர்கள் கொந்தளித்தனர்.

டிசிபி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஜெயவர்தனும், மற்ற அதிமுகவினரும் போலீஸாரின் வாகனத்தைப் பின்தொடர்ந்து, நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பு திங்கள்கிழமை இரவு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜெயவர்த்தனையும், அதிமுகவினரையும் ஒரு சமுதாயக் கூடத்தில் தடுத்து நிறுத்திய போலீஸார், நுங்கம்பாக்கம் உயர் சாலையை இணைக்கும் அனைத்துச் சாலைகளிலும் முடங்கியிருந்த போக்குவரத்தை மீண்டும் தொடங்கினர்.

இதனிடையே, சனிக்கிழமை ராயபுரத்தில் உள்ள வாக்குச் சாவடி அருகே தன்னை தாக்கியதற்காக’ முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஓட்டுநர் ஜெகநாதன் அளித்த புகாரின் பேரில், தண்டையார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, கொளஞ்சிநாதன், 49,  ஸ்ரீதர், 46, சுதாகர், 43, ஆகிய 3 பேரை கைது செய்தனர்.  

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் அட்டூழியங்கள், வன்முறைகள், ஜனநாயகப் படுகொலைகள் குறித்து கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Jayakumar arrested many cases has been registered against jayakumar