அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார் சென்னையில் பேட்டியளித்தார். அப்போது, “அமைச்சர் செந்தில் பாலாஜி ஏன் கடப நாடகம் ஆடுகிறார்: அவரை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும்” என்றார்.
இது குறித்து அவர், “செந்தில் பாலாஜி அதிமுக அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது அவர் மீது புகார்கள் வந்தன.
உடனடியாக அவரை அமைச்சரவையை விட்டு ஜெயலலிதா நீக்கினார். அவரை மீண்டும் அமைச்சராக்கியது திமுக அரசுதான். தற்போது ரிமாண்டில் உள்ள செந்தில் பாலாஜியை காப்பாற்ற நினைக்கின்றனர்.
அவரை உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து, “செந்தில் பாலாஜி நிரபராதி என்றால் அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு கபட நாடகம் ஆடக் கூடாது” என்றார்.
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“