மதுரையில் அதிமுக மாநாடு ஆக.20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி தொடர் ஜோதி ஓட்டத்தை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட்-ஐ ஒழிப்பதுதான் என்றார்கள். அதன் சூட்சுமம் எங்களுக்குதான் தெரியும் என்றார்.
ஆனால் என்ன நடக்கிறது? நீட் தொடர்பான தற்கொலைகள் மனதை பதை பதைக்க செய்கின்றன” என்றார். தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுககு நிகழ்ந்த அநீதி குறித்து பேசுகையில், “திருநாவுக்கரசருக்கு கண்டனம் தெரிவித்தார்.
அப்போது, “உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை திருநாவுக்கரசு செய்திருக்கிறார்.வரலாற்றுத் சம்பவத்தின் உண்மை தன்மையை மறைத்து பேசும் திருநாவுக்கரசின் செயல் வருத்தத்திற்கு உரியது” என்றார்.
மேலும், திமுக ஒரு துச்சாதணா.. துரியோதனா கட்சி என்றார். பின்னர் ஒரு பெண்ணை எவ்வளவு அவமதிக்க முடியுமோ அதற்கு மேலும் ஜெயலலிதாவை அவமதித்தனர்” என்றார்.
தொடர்ந்து, “திருநாவுக்கரசு அரசியலில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அதிமுகவுக்கு என்றென்றும் கடமைப்பட்டு இருக்க வேண்டியவர்” என்றார்.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“