/indian-express-tamil/media/media_files/rI6LTIZyCiYy6m3FKaym.png)
சென்னையில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டி ஜெயக்குமார் நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
d-jayakumar | அதிமுக மூத்தத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், திரு.வி.க. நகர் தொகுதியில் சைக்கிள் ரிக்ஷாவில் சென்று இன்று நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.
அப்போது அவருடன் அவரின் ஆதரவாளர்கள் சூழ்ந்து காணப்பட்டனர். ஆட்டோ ரிக்ஷாவில் சென்ற டி.ஜெயக்குமார் வீடு வீடாக சென்றார். அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டன. இங்குள்ள பல்வேறு பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியவில்லை.
மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கும் பணிகளுக்கு டோக்கன்கள் டிச.16ஆம் தேதி வழங்கப்பட உள்ளன.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
— D.JAYAKUMAR (@djayakumarfans) December 11, 2023
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை...
காலம்தோறும் பாடம் கூறும்
மாறுதல் இங்கே தேவை
ஏழை எளியோர் துயரம் போக்கும் செயலே எந்தன் சேவை...#நான்உங்கள்வீட்டுப்பிள்ளை@djayakumaroffcl@AIADMKITWINGOFL@ADMK_Chennaipic.twitter.com/6HI02fYDha
இந்தப் பணிகளில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். சென்னை ரேஷன் கார்டு உள்ள நபர்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
முன்னதாக மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அதிமுக நிவாரண உதவி எண்களை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.