அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று (ஆக.16) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக எழுச்சி மாநாடு மதுரையில் ஆக.20ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ளனர். 40 ஆயிரம் வாகனங்கள் வரவுள்ளன.
இதையெல்லாம் திமுகவால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஆக.20ஆம் தேதி அவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
ஏன் அவர்களுக்கு வேறு ஒரு தேதி கிடைக்கவில்லையா? அதிமுகவின் போராட்டம் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக இந்தப் போராட்டத்தை வைத்துள்ளனர்.
மேலும் நீட் தேர்வை எதிர்த்து கேள்விகேட்ட திமுகவுக்கு எந்தத் தகுதியும் இல்லை. குரோம்பேட்டையில் என்ன நடந்தது. முதலில் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என்றார்கள்.
தற்போது கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்கிறார்கள். இதெல்லாம் பொறுப்பற்ற பேச்சுகள்” என்றார்.
தொடர்ந்து, “அதிமுக மாநாட்டுக்கு இடைஞ்சல்கள் கொடுத்துவருகின்றனர். இது நாள்கள் நெருங்க நெருங்க அதிகமாகும்” என்றும் குற்றஞ்சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“