scorecardresearch

ஓ.பி.எஸ் மீது வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் அதிருப்தி: ஜெயக்குமார் சரவெடி

ஓ. பன்னீர் செல்வம் மீது மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் அதிருப்தியில் இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Jayakumar said that there is dissatisfaction in the Panneer Selvam team
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்

அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லம் சென்று ஓ. பன்னீர் செல்வம் சந்தித்தார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, அதிமுகவை மீட்போம் என இருவரும் பேட்டியளித்தனர். அடுத்து ஓ. பன்னீர் செல்வம் சசிகலாவை சந்திக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வம் மீது அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பின்போது, “ஓ. பன்னீர் செல்வத்தின் செயலால் அவருடன் உள்ளவர்களே அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்” என்றனர்.

ஆக வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை குறி வைத்துதான் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஓ. பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்திய காலக்கட்டத்தில் இருந்தே அவருக்கு பக்க பலமாக மனோஜ் பாண்டியன் இருந்து வருகிறார்.
அக்காலக்கட்டத்தில் வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்தார். தொடர்ந்து இரு அணிகளும் இணைந்த பின்பு, அவர் ஓ. பன்னீர் செல்வம் அணி வந்தார்.

ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி. தினகரனை சந்தித்த போது அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரன் சென்றிருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Jayakumar said that there is dissatisfaction in the panneer selvam team

Best of Express