நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க இல்லாத கட்சிகளை வரவேற்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது;
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு பா.ஜ.க. இல்லாத கட்சிகளை வரவேற்கிறோம். கூட்டணிக்கு பெரிய கட்சிகள் பல பேசிக் கொண்டிருக்கின்றன.
சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்கு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். தேர்தல் அறிக்கை தொடர்பாக மண்டலம் வாரியாக மக்களை சந்தித்து கருத்து கேட்க உள்ளோம். நாளை வேலூர் மண்டலம், 6-ம் தேதி விழுப்புரம் மண்டலத்தில் மக்களை சந்திக்கிறோம்.
10 பேர் கொண்ட குழு நேரடியாக மக்களைச் சந்தித்து கருத்துக்களைப் பெறுகிறது. மக்கள் தங்கள் பரிந்துரைகளை, கருத்துக்களை இ-மெயில் மூலமாகவோ, கொரியர் மூலமாகவோ அனுப்பலாம். இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“