ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் வைக்க ஜெயலலிதாவின் புதிய சி்லை தயாராகி விட்டது. புதியதாக தயாராகியுள்ள சிலையின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா சிலை:
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் ஜெ.வின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இணைந்து இந்த சிலையை திறந்து வைத்தனர்.
இந்த வெண்கலச் சிலையைக் கண்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் ஜெ.வின் சிலை அவரின் சாயலில் இல்லை என்று விமர்சனங்கள் எழுந்தனர். சமூகவலைத்தளங்களில் இதுக் குறித்து மீம்ஸ்களும் வைரலாகினர்.
ஜெ.வின் பழைய சிலை, புதிய சிலை
இந்த விமர்சனங்களுக்கு பிறகு ஜெ.வின் சிலை விரைவில் மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது சிலை குறித்த வேலைகளும் துரிதப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் சிலையின் வேலைபாடு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தயாராகியிருக்கும் புதிய சிலைக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சம்மதம் வழங்கியுள்ளதால் எந்த நேரமும் பழைய சில அகற்றப்பட்டு புதிய சிலை நிறுவப்படலாம் என்று தெரிகிறது. இச்சிலையை ராஜ்குமார் என்ற சிற்பி சிறப்பாக வடிவமைத்துள்ளார்.
புதிய சிலையின் புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது. முன்பு வடிவமைக்கப்பட்ட சிலை போல் இல்லாமல், இந்த இரண்டாவது சிலை ஆவது தொண்டர்களுக்கு ஜெயலிதாவின் உருவத்தை ஞாபகப்படுத்தி அனைவரையும் கவருமா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வெண்கலச்சிலை வரும் 28 ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் நிறுவப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.