scorecardresearch

ஜெயலலிதா பிறந்த நாள்: அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி இ.பி.எஸ் கொண்டாட்டம்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதா பிறந்த நாள்: அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி இ.பி.எஸ் கொண்டாட்டம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் தலைவருமான ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் இன்று என்பதால் அதிமுகவினர் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு பெரும் வரவேற்புடன் வருகைதந்த இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு, எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அவரது நினைவிடத்தில், மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு இரும்பு பெண்மணி என்பதை ஆங்கிலத்தில் மலர்களால் எழுதப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Jayalalitha 75th birthday eps flower decorations in memorial

Best of Express