ஜெயலலிதாவின் உதவியாளராக இருபது ஆண்டுகளுக்கு மேல் இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அரசியல் தொடர்புகளில் இருந்து தன்னைத் துண்டித்துக்கொண்ட பூங்குன்றன் தற்போது தஞ்சையில் வசித்தபடி விவசாயம் செய்கிறார். அவ்வப்போது, கோயில்களுக்கு சென்று திருப்பணிகளையும் செய்துவருகிறார்.
அரசியலில் இருந்து விலகி இருந்த அவர், கடந்த ஜனவரியில் சசிகலா விடுதலையான சமயத்தில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கு வகையில், பேஸ்புக்கில் பதிவிட்டு பேசும் பொருளாக மாறியுள்ளார். தற்போது அவரின் சமீபத்திய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அதில், அதிமுக-வின் பின்னடைவுக்கு என்ன காரணம்?எதிரி யார் என்று தலைவர்கள் புரிந்து கொள்ளாமல் போனது தான்.அதிமுக-வின் எதிரி யார்?புரட்சித்தலைவருக்கு தெரியும். புரட்சித்தலைவிக்கு தெரியும். தொண்டர்களுக்கு தெரிந்திருக்கிறது. எனவே, தொண்டர்களை கேட்டுத் தலைவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil