ஜெயலலிதாவின் வீரம் கண்டு வியந்துள்ளேன் – நடிகை குஷ்பூ புகழாரம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கும் நடைமுறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

By: Updated: February 24, 2020, 04:24:45 PM

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளையொட்டி, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நடிகை குஷ்பூ, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கும் நடைமுறையை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அதிமுக தலைமைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பினை வலியுறுத்தும் வகையில், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, பேரணி, கருத்தரங்கம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அனைத்து அரசு அலுவலகங்களிலும், அனைத்து பள்ளிகளிலும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படுகிறது.

சென்னை, பசுமைவழிச் சாலையில், தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளைக் குறிப்பிடும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம், தலைமைச் செயலகம் எதிரே உள்ள பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அரசு இல்லங்களில் வாழும், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாத 21 வயதை நிறைவு செய்த பெண்களுக்கு தலா இரண்டு லட்சம் வழங்கும் திட்டம், குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் பெற்றோருக்கான மாத பராமரிப்புத் தொகையை உயர்த்தும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து ராயப்பேட்டையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

72 கிலோ எடையில் அதிமுக கொடி வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர்.

ராயபுரத்தில் உள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த 7 பெண் குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்க மோதிரம் பரிசளித்தார்.ஜெயலலிதாவின் பிறந்த நாளை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நாளில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படத்திற்கு மரியாதை செலுத்தி, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மரக்கன்றுகள் வழங்குதல், அன்னதானம், மாணவர்களுக்கு பாடப்பொருட்கள் வழங்குதல் என மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்

குஷ்பூ : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது எனக்கு கருத்து வேறுபாடு இருந்துள்ள போதிலும், நான் அவரை உண்மையான பெண் தலைவராக பார்க்கிறேன். ஆண்கள் ஆதிக்கம் இருந்த இடத்தில் பெண் என்று தனித்து ஒதுங்கிவிடாமல் போராடி வெற்றி பெற்ற குணத்தை கண்டு நான் வியந்திருக்கிறேன். அவரைப்போன்று எல்லா பெண்களும் மனத்திடம் மிகுந்து இருக்க வேண்டும்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தனது இன்ஸ்பிரேசன் என குறிப்பிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Jayalalitha birth anniversary chief minister edappadi palanichami girl child protection day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X