/indian-express-tamil/media/media_files/gWTU5Zmi4Mk1dqi5xrrB.jpg)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
Jeyalalitha BirthDay: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இநநிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது மரியாதையை செலுத்தினர்.
இதேபோல், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மதுரையில் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.