வேதா இல்லம் அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன்: ஜெ. தீபா
J.Deepa : வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது. எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன். அதிமுகவினர் உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்க வேண்டும்
jayalalitha, chennai, poes garden, vedha illam, j. deepa, heirs, chennai high court, judgement, governor, appeal , admk, news in tamil, tamil news, news tamil, todays news in tamil, today tamil news, today news in tamil, today news tamil
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம் தொடர்பாக, தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார்.
Advertisment
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர், ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என அறிவிக்கப்பட்டது தொடர்பாகச் சென்னை தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் ஜெ.தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறது. ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை நாங்களே எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளேன்.
Advertisment
Advertisement
நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நான் வேதா இல்லத்துக்குச் செல்ல மாட்டேன். தமிழக அரசு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறது. வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது. எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன். அதிமுகவினர் உயர்நீதிமன்ற தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
வேதா இல்லம் குறித்து தமிழக அரசு இயற்றிய சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன் என்றும் தீபா கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil