முன்னாள் ஆளுநரை பார்த்து ஜெயலலிதா கை அசைக்கவில்லை : மருத்துவர் சிவக்குமார்

ஜெயலலிதா மறைவு தொடர்பான விசாரணையில், முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ்-ஐ ஜெயலலிதா பார்த்து கை அசைத்தார் என்பது உண்மையில்லை என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து நீத்பதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானவர்கள் அனைவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா உறவினர்கள், கட்சி நபர்கள், சசிகலா மற்றும் குடும்பத்தினர் மற்றும் அப்போலோ மருத்துவர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக சசிகலா உறவினர் மற்றும் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவருமான சிவக்குமாரிடம் 3வது முறையாக விசாரணை நடத்தப்பட்டது. 3வது முறையான விசாரணைக்கும் அவர் நேரில் ஆஜர் ஆகி விசாரணைக் குழு கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்தார்.

சிவக்குமாரிடம், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு முன்னதாக அளிக்கப்பட்ட மருத்துவம் மற்றும் மருந்துகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது அவரை யாரெல்லாம் சந்தித்தார் என்ற கேள்விகளும் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சிவக்குமார், ஜெயலலிதாவை சசிகலா தவிர வேறு யாரும் சந்திக்கவில்லை எனக் கூறினார். அமைச்சர்கள் யாரும் நெருக்கத்தில் நின்று ஜெயலலிதாவைக் காணவில்லை என்றும் கூறினார்.

இந்த விசாரணையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை பார்த்தாக கூறப்படும் தகவல் குறித்து கேட்டபோது அந்தத் தகவல் உண்மை இல்லை எனத் தெரிவித்தார். தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அவரைப் பார்த்து ஜெயலலிதா கை அசைத்ததாகவும், “தோஸ் எவன்சுவல் டேஸ்” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தகவலை சுட்டிக்காட்டிக் கேட்டதற்கு அவை அனைத்தும் உண்மையில்லை ஜெயலலிதா அப்போதைய ஆளுநரைப் பார்த்து கை அசைக்கவில்லை என சிவக்குமார் கூறினார்.

×Close
×Close