டிசம்பர் 4ம் தேதியே ஜெயலலிதா இறந்துவிட்டார்! - திவாகரன்

ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார்

மன்னார்குடியில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் பேசிய திவாகரன், “ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்துவிட்டார். நான் அன்று மாலையே அப்போலோ சென்று, பிரதாப் சி ரெட்டியிடம் கேட்ட பொழுது, தமிழகம் முழுவதும் உள்ள அப்போலோ மருத்துவமனைகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னர் தான் முதல்வரின் மரணம் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என என்னிடம் கூறினார்” என்று திவாகரன் கூறியுள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதா டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு மரணமடைந்ததாக அப்போலோ அறிவித்து இருந்தது. இப்போது சசிகலா சகோதரர் திவாகரன், ஜெயலலிதா டிசம்பர் 4ம் தேதியே இறந்துவிட்டார் என கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கிஷோர் கே சாமி, இன்று மதியம் ஒரு மணிக்கே, இந்த தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close