Advertisment

6-ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக தலைவருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

author-image
WebDesk
Dec 05, 2022 12:26 IST
6-ம் ஆண்டு நினைவு நாள் ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது நினைவு தினம்

மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக தலைவருமான ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

Advertisment

ஆகையால் இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

publive-image

அவருடன் அதிமுக-வின் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார் , கேபி முனுசாமி, செங்கோட்டையன், ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இன்று காலை 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதையடுத்து, ஓபிஎஸ் கூறியதாவது: "தொண்டர்களை ஒன்றிணைவோம், அதிமுகவை வெற்றியடைய செய்வோம்" என்று உறுதிமொழி எடுத்தார்.

அதிமுக தலைவர்கள் கருப்பு சட்டை அணிந்து, ஜெயலலிதா நினைவு தினத்தை அனுசரித்தனர். இதையடுத்து பொதுமக்கள் பலர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகைத்தந்து மரியாதை செலுத்துகின்றனர்.

இதனால் கூட்ட நெரிசல் அதிகரிக்காமல் தடுப்பதற்கு காவல் துறை தங்களது பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Admk #Aiadmk #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment