Advertisment

இதே நாளில் ஜெயலலிதா கடைசி நிகழ்ச்சி… உருக்கமான வீடியோ பகிரும் அதிமுகவினர்!

அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் ஜெயலலிதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோவையும் புகைப்படங்களையும் உருக்கமுடன் பகிர்ந்து அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jayalalitha last event, jayalalitha participates last event, ஜெயலலிதா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி, ஜெயலலிதாவின் கடைசி பேச்சு வீடியோ, ஜெயலலிதா, அதிமுக, தமிழ்நாடு அரசியல், jayalalitha last moment, aiadmk cadres jayalalitha's last event video, aiadmk, tamil nadu politics, former tamil nadu cm jayalalitha

தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆளுமை மிக்க தலைவியாக விளங்கிய அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே செப்டம்பர் 22ல்தான் திடீர் உடல் நலக்குறைவல் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பிறகு, அவர் திரும்ப வரவில்லை. டிசம்பர் 5, 2016ல் மருத்துவமனையிலேயே காலமானார்.

Advertisment

இந்திய அரசியலில் இந்திரா காந்தி, மாயாவதி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, வரிசையில் உறுதியான ஆளுமை மிக்க பெண்மணியாக விளங்கினார். தமிழ்நாட்டில் ஆண்கள் ஆதிக்கம் மிகுந்த அரசியலில், தமிழக அரசியலில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக செயல்பட்டுவரும் மாநிலத்தின் பிரதான கட்சியான அதிமுகவின் பொதுச் செயலாளராக கால் நூற்றாண்டு காலம் ஒற்றைத் தலைவியாக இருந்தார்.

ஒரு சினிமா நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது அறிவாலும் ஆற்றலாலும் மக்கள் செல்வாக்காலும் உறுதியான ஆளுமையாலும் அதிமுகவின் தலைவரானார். தமிழக முதல்வராக 3 முறை பதவி வகித்தார். அரசியலில் பல வெற்றி தோல்விகளைக் கண்டாலும் தமிழக மக்களால் அன்புடன் அம்மா என்று அழைக்கிற நிலைக்கு உயர்ந்தார்.

தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் இரும்பு பெண்மணியாக இருந்து கோலோச்சிய ஜெயலலிதா, தனது 69வது வயதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5, 2016-ல் உயிரிழந்தார். அவருடைய மரணம் குறித்து அதிமுகவிலும் அதிமுகவுக்கு வெளியே பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக முதலமைச்சராக இருக்கும்போதே காலமான ஜெயலலிதா, இதே செப்டம்பர் 22ம் நாளில்தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 74 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிமுகவின் தனிப்பெரும் தலைமையாக, தென்னிந்தியாவின் அரசியல் துருவமாக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு, அதிமுகவில் ஒரு பெரிய அரசியல் புயலே வீசிச் சென்றது என்பது தமிழக மக்கள் அறிந்ததே.

அதிமுகவின் ஒற்றைத் தலைவி தமிழக மக்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபடுவதற்கு முன்னதாக, அவர் இதே நாளில் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி, கடைசி பேச்சு, கடைசி தருணத்தை அதிமுக தொண்டர்கள் நினைவு கூர்ந்து அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

செப்டம்பர் 21, 2020ம் தேதி சென்னை, சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சிதான் ஜெயலலிதா பங்கேற்ற கடைசி அரசு நிகழ்ச்சி ஆகும். ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே சென்னை சின்னமலை முதல் விமான நிலையம் வரையிலான 2-வது கட்ட மெட்ரோ ரெயில் போக்குவரத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சராக இருந்த வெங்கய்யா நாயுடு நின்று கொடி அசைத்து வைத்தார்.

அதிமுகவினர் ஜெயலலிதாவின் கடைசி நிகழ்ச்சியாக, தலைமை செயலகத்தில் ஜெயலலிதா பச்சை சேலையில், பச்சை கொடியை காட்டி போக்குவரத்தை துவக்கி வைத்த வீடியோவை பகிர்ந்து வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா மெதுவாக நடந்து வந்து அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு 45 நிமிடங்கள் முன்னதாகவே வந்த ஜெயலலிதா தளர்வாக காணப்பட்டாலும் வழக்கம் போல புன்முறுவலுடன் இருந்தார். உடல் நலக் குறைவு காரணமாகத்தான் ஜெயலலிதா இந்த நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொள்ளவில்லை.

அப்போது, வெங்கையா நாயுடு சின்னமலைக்கு வர தாமதமானதால் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வெங்கையா நாயுடு வந்த பிறகு, மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மெட்ரோ ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்த ஜெயலலிதா 6 நிமிடங்கள் மட்டுமே பேசினார். அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது: “சென்னையை அதிநவீன நகரமாக மாற்ற வேண்டும் என்பது என்னுடைய கனவு, அந்த கனவு கொஞ்சம் கொஞ்சமாக நனவாகி வருகிறது” என்று கூறினார்.

ஜெயலலிதாவை பொதுமக்கள் பார்த்த கடைசி நிகழ்ச்சி அதுதான். அதன் பிறகு, மறுநாள் செப்டம்பர் 22-ம் தேதி காலைவரைகூட திட்டங்களைத் தொடங்கிவைத்தார். அன்று இரவே ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.. 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து சென்ற தகவலானது, மறுநாள் 23-ம்தேதி தான் தமிழக மக்களுக்கு தெரியவந்தது.

ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகி தமிழ்நாடே பரபரப்பானது. அப்பல்லோ மருத்துவமனையில் 74 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் டிசம்பர் 5, 2020ல் காலமானார் என்ற செய்தி வெளியாகி தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக ஆளுமை செலுத்திய ஜெயலலிதா மறைந்து 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த செப்டம்பர் 22ம் தேதியும் அவர் கடைசியாக பங்கேற்ற மெட்ரோ ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியும் மறக்க முடியாத நாட்களாக அமைந்துவிட்டன. அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் ஜெயலலிதா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியின் வீடியோவையும் புகைப்படங்களையும் உருக்கமுடன் பகிர்ந்து அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Jayalalithaa Jayalalitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment