கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாவலராக இருந்த பெருமாள் சாமி, கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017 ஏப்ரல் 23 அன்று, கோடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. முன்னாள் ஓட்டுநர் சி. கனகராஜ் தலைமையிலான குழு, எஸ்டேட்டில் பெரும் பணம் இருக்கிறது என நம்பி, ஆயுதங்களுடன் வந்தனர். அங்கிருந்த பாதுகாவலர் ஓம்பகதூரை கொன்று, பொருட்களை கொள்ளை அடித்தனர்.
இந்த வழக்கில் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். மேலும், எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் குமார் தற்கொலை செய்துகொண்டார். இந்த தொடர்ச்சியான மரணங்களால் வழக்கின் மர்மம் அதிகரித்தன.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஊட்டி கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழு தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 200-க்கும் மேற்பட்டவர்களிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தற்போது ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த பெருமாள் சாமியை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பெருமாள்சாமி, இன்று கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.
கடந்த வாரத்தில் செவ்வாய்க் கிழமை அன்று, முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீர பெருமாள் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இன்று, இன்னொரு பாதுகாப்பு அதிகாரி பெருமாள் சாமி விசாரணைக்கு ஆஜராகி, சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தி ஆஜராகி உள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.