ஜெயலலிதா சிலை : தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் திரு உருவ சிலை கடந்த பிப்ரவரி மாதம் சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்டது. அந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தனர். அந்த சிலையை வடிவமைத்த பிரசாத் என்ற சிற்பிக்கு எடப்பாடி பழனிசாமி தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்தார்.
ஆனால் அந்த திரு உருவச் சிலையில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்ததால், அந்த சிலை ஜெயலலிதாவுடையதா என்ற கேள்விகளும், பல்வேறு விமர்சனங்களும் அதிமுக தொண்டர்களாலே கேட்கப்பட்டது.
ஜெயலலிதா சிலை இன்று திறக்கப்படுகிறது
இந்த விமர்சனங்களைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் சிலை மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரண்டாவது சிலையை சிற்பி ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் வடிவமைத்து கொடுத்திருக்கிறார். இந்த சிலை இன்று ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் நிறுவப்படுகிறது. இந்த சிலையை ஓபிஎஸ்-ஈபிஎஸ் திறந்து வைக்கின்றனர்.
மேலும் படிக்க : ஜெயலலிதாவின் புதிய சிலை தொண்டர்களை கவருமா ?
அதிமுக தலைமையகத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் சிலை