jayalalitha vedha house poes garden : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவிடமாக்க மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, தமிழக சட்டப்பேரவையில் தீர்மனமும் நிறைவேற்றப்பட்டது. ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளனர்.
Advertisment
இந்நிலையில், ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கி ரூ.36.9 கோடியும், வாரிசுகள் தீபா, தீபக்கிற்கு ரூ.29.3 கோடியும் அரசு டெபாசிட் செய்துள்ளது. நினைவு இல்லமாக மாற்ற அரசு இழப்பீட்டுத் தொகையை செலுத்தியது மூலம் வேதா இல்லம் அரசுடைமையானது.
வேதா இல்லத்தில் ஜெயலலிதா 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இந்த வீட்டை அவ்வளவு எளிதாக யாராலும் பார்த்திட முடியாது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வீட்டில் இருக்கும் அசையா சொத்துக்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
4.37 கிலோ தங்க ஆபரணங்கள், 601.4 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது என பட்டியிடப்பட்டுள்ளது. 8,376 புத்தகம், 11 டிவி, 38 ஏசி சாதனங்கள், 394 நினைவு பரிசுகள் இருப்பதும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.38 ஏர்கண்டிஷனர்கள், 29 தொலைபேசி மற்றும் செல்போன்கள், 10 ரெப்ரிஜிரேட்டர்கள், 6 கடிகாரங்கள் போன்ற ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களும் அங்கு உள்ளன.
அசையும் சொத்துக்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பொருட்கள் சமையல் பாத்திரங்கள் தான்.10,438 ஆடைகள் உள்பட 32,700 அசையும் சொத்துக்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 556 மரச்சாமன்கள், 108 அழகு பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil