மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு பதில், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற, அரசு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டுமென வேண்டுமென அதிமுக பிரமுகர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமாரின் மகள் தீபா மற்றும் தீபக்கை தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்க்க உயர் நீதிமன்றம் அவர்களிடம் விசாரணையும் செய்தது.
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கும் நிர்வாகிகளாக தங்களை நியமிக்க கோரி, தீபாவும், தீபக்கும் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் குத்தூஸ் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.
சென்னை மெட்ரோ எப்போது தொடங்கும்? முக்கிய அப்டேட்
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசுரிமைச் சட்டப்படி ஜெயலலிதாவின் சகோதரரின் மகள் தீபா மற்றும் தீபக்கை இரண்டாம் நிலை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், ஜெயலலிதாவின் சொத்துக்களில் சிலவற்றை ஒதுக்கி, அவர் பெயரில் பொது சேவைக்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் என தீபா, தீபக்குக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதுசம்பந்தமாக எட்டு வாரங்களில் அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டனர்.
ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேலும், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 100 கோடி ரூபாய் மதிப்பிலான போயஸ் தோட்ட இல்லத்தை அரசு கையகப்படுத்தும் போது, அதற்கான இழப்பீட்டை நிர்ணயித்து, அதை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தி, அதற்கு பெருந்தொகையை இழப்பீடாக வழங்குவதற்கு பதில், அத்தொகையை குடிநீர் திட்டத்துக்கும், நீர்நிலைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தலாம் என நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
42 பேருக்கு கொரோனா, ஸ்ரீபெரும்புதூர் ஆலையை தற்காலிகமாக மூடிய நோக்கியா
மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் வழங்குவதே, கட்சித் தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மறைந்த முதல்வர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்ற அரசுகள் முடிவெடுத்தால், அது ஒரு தொடர்கதையாகவே இருக்கும் எனவும், அரசு பணம் தேவையில்லாமல் நினைவு இல்லங்கள் அமைக்கவே செலவிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என யோசனை தெரிவித்த நீதிபதிகள், போயஸ் தோட்ட இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றுவதற்கு பதில், ஒரு பகுதியை நினைவு இல்லமாகவும், மீதமுள்ள பகுதிகளை முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கும், தீபக்குக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் சொத்துக்களில் ஒன்றை விற்று, அத்தொகையை வங்கியில் டிபாசிட் செய்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பாதுகாப்பு செலவினங்களுக்கு பயன்படுத்த தீபா, தீபக்குக்கு உத்தரவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.