ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை இருந்தபோது டிசம்பர் 4ஆம் தேதியே மரணித்துவிட்டதாகவும் அதற்கு இருவர் சாட்சி என்றும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி நள்ளிரவு 11.30 மணிக்கு மரணித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணிக்கவில்லை,
மாறாக டிசம்பர் 4ஆம் தேதி மாலை 3.30 மணிக்கும் 3.50க்கு மரணித்துவிட்டார் என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக 608 பக்கங்கள் கொண்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை இன்று (அக்.18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் மரணம், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டில் மயக்கம் அடைவதற்கு முன்பும் அவருக்கு 3 நாள்கள் காய்ச்சல் இருந்துள்ளது.
அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை தேவைப்பட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரைந்தும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து போலியான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தின் இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“