சூடுபிடிக்கும் ஜெயலலிதா மரணம் விவகாரம்... வேகமாக பரவும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே வீடியோ

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல விரும்பவில்லை என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பாக உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த ஆணையத்தில் அரசு அதிகாாிகள் தொடங்கி ஜெயலலிதா வீட்டு பணியாளா்கள் வரை அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மருத்துவர் ரிச்சர்ட் பீலே வீடியோ

இந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இணையத்தளம் முழுவதும் பரவி வருகிறது. இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கேள்விகள் கேட்க, அவருக்கு பதில் அளிக்கிறார் டாக்டர் ரிச்சர்ட் பீலே.

கேள்வி: முதலமைச்சர் வெளிநாடு செல்ல விரும்பவில்லை என்ற ஒரு கேள்விக்கு சரியாக விடையளித்தீர்கள்.

ரிச்சர்ட்: ஆம்

கேள்வி: முன்னாள் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அறுவை சிகிச்சை வேண்டாம் என்ற போது குடும்பத்தினர் அவரை சமாதானம் செய்தனர். அதுபோல், சசிகலா லண்டனில் சிகிச்சையளிக்க வைக்க என்ன சொன்னார்?

ரிச்சர்ட்: லண்டனுக்குச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதா? என என்னிடம் கேட்டார். கண்டிப்பாக போக வேண்டும் என்று நாங்கள் சொன்னதாக நினைக்கிறேன். அவர்கள் லண்டன் செல்ல வேண்டும் என பரிந்துரைத்திருப்பார்கள். அந்த சந்திப்பின் ஆரம்பத்தில் ஒரு சமநிலை இல்லை. அதன் பின், மேடமே தமக்கு லண்டன் போக விருப்பமில்லை என கூறிவிட்டார்.

கேள்வி : ஆனால், சசிகலா முடிவெடுப்பவராக இருந்தார். கண்டிப்பாக லண்டனுக்கு சிகிச்சைக்காக போக வேண்டும் என சசிகலா புரிய வைத்திருக்கலாம் அல்லவா?

ரிச்சர்ட்: நீங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறீர்கள் என்றால் போகலாமா? வேண்டாமா? என நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். . உண்மையைச் சொல்லபோனால். . .

கேள்வி: நவம்பர் 3-ஆம் வாரத்தில் அப்பலோ மருத்துவமனை தரப்பில் இருந்து உங்களை அழைக்கவில்லையே?

ரிச்சர்ட்: எனக்குத் தெரியாது. அந்தளவு நான் அவர்களுடன் தொடர்பில் இல்லை. என்னை ஏன் அழைக்க முடியவில்லை என தெரியவில்லை. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவர்கள் கருதியிருக்கலாம்.

கேள்வி: பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்க வருமாறு உங்களை லண்டனில் இருந்து அழைத்தவர்கள், நவம்பர் 3-ம் வாரத்தில் ஏன் அழைக்கவில்லை.

ரிச்சர்ட்: என்னால் பதில் சொல்ல முடியாது. எனக்குத் தெரியாது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close