arumugasamy probe commission : ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் அதன் வழக்கு விசாரணைக்கு தங்கள் மருத்துவமனை மருத்தவர்கள் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கோரப்பட்டது. ஆனால், 90 சதவிகித விசாரணை முடிவடைந்த நிலையில் மருத்துவா் குழுமை அமைக்க முடியாது என்று ஆணையம் தரப்பில் தொிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.
இதனைத் தொடா்ந்து மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, மருத்துவமனை சாா்பில் ஏற்கனவே ஆணையத்தில் பல ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஆவணங்கள் முறையாக புரிந்துகொள்ளப்படவில்லை. எனவே 21 மருத்துவா்கள், உயா் அதிகாாிகளை கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று அப்பலோ நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்றது. அப்போது தங்கள் மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தில் தனி குழு அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இறுதியில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், அப்பலோ மருத்து நிர்வாகம் முன்வைத்த கோரிக்கை குறித்து தமிழக அரசு உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.