Advertisment

ஜெ.மரணம் தொடர்பான விசாரணை : இளவரசி மகன் விவேக் பரப்பரப்பு வாக்குமூலம்!

விவேக் மீண்டும் வரும் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
,vivek jeyaraman, poes garden,jayalalitha, IT Raid in Poes garden

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், இளவரசி மகன் விவேக் நேரில் ஆஜராகி சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்தார்.

Advertisment

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள்,  முன்னாள் தலைமைச் செயலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் அவருக்கு சிகிச்சை பார்த்த  அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அனைவரிடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் தனித்தனியாக கூறிய வாக்குமூலங்கள் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், விசாரணை ஆணையம் சமீபத்தில், பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு சம்மன் அனுப்பியது. அவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்படவுள்ள நிலையில், இளவரசியின் மகனான  விவேக் ஜெயராமனுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 9 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. இதனைத்தொடர்ந்து விவேக், நேற்று (14.2.18) விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜாராகினார்.  சுமார் 3 நேரம் நடந்த இந்த விசாரணையில், விவேக் பரப்பரப்பான பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

விவேக்கிடம் நீதிபதி பல கேள்விகளை கேட்டதாகவும், அவர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், விவேக் முழுமையாக பதில் அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்தது? ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரை மருத்துவமனையில் சந்தித்தீர்களா?, ஜெயலலிதாவை உங்களது தாயார் மருத்துவமனையில் சந்தித்தாரா? ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பரவு தகவல் உண்மையா? என்பது போன்ற பல கேள்விகளை நீதிபது ஆறுமுகசாமி முன்வைத்துள்ளார்.

இதற்கு விவேக் கூறியதாவது: “ ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது நான் வெளிநாட்டில் இருந்தேன். அங்கிருந்து  திரும்பிய பின்பும்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை நேரில் பார்க்கவில்லை “ என்று  பரப்பரப்பு தகவலை விவேக் கூறியுள்ளார். இந்த விசாரணைக்கு பின்பு, விவேக் மீண்டும் வரும் 28 ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், விவேக் ஆணையத்திற்கு  வருவதை அறிந்திருந்த  அவரது ஆதரவாளர்கள் பலர் அந்த இடத்தில் கூடியிருந்தனர்.

 

Vivek Jayaraman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment