மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, ஜெயலலிதா சம்மந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வந்தது. இதுவரை அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள் என இதுவரை 154 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்த நிலையில், இந்த ஆணையத்தில்’ உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில்’ உச்ச நீதிமன்றத்தில் 2019-ல் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, ஆணையத்தின் விசாரணைக்கு நீதிமன்றம்’ இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவும் வகையில், எய்ம்ஸ் இயக்குநா் நிகல் டாண்டன் தலைமையில்’ மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த பிப்.16 அன்று, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து’ மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் கடந்த 16-ம் தேதி ஆலோசனை நடத்தியது.
அதன்படி’ மார்ச் 7, 8 தேதிகளில் குறுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 11 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு’ ஜெயலலிதா மரணம் தொடர்பான அடுத்த கட்ட விசாரணை இன்று (மார்ச் 7) மீண்டும் தொடங்கியது. விசாரணையின் போது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எய்ம்ஸ் மருத்துவர்கள் காணொலி மூலம் விசாரணையில் பங்கேற்றனர்.
அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் பாபு மனோகர், அருள்செல்வம், ராமகிருஷ்ணன், சுந்தர் மற்றும் காமேஷ் உள்பட 5 பேர் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
விசாரணையில் பங்கேற்ற அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்’ 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன்னதாக அவருக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் ஆகிய பிரச்சனைகள் இருந்தது. ஆகவே, மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முந்தைய நாள்’ போயஸ்கார்டனில் ஜெயலலிதாவை சென்று சந்தித்தேன். அவருக்கு சில மருந்துகள் மற்றும் சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ள பரிந்துரைத்தேன். மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு கூறினேன். ஆனால்’ ஜெயலலிதா நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி’ ஓய்வெடுக்க மறுத்தார் என மருவத்துவர் பாபு மனோகர் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மருத்துவர்கள் வாக்குமூலத்தின் படி, ஜெயலலிதாவுக்கு ஏற்கெனவே உடல் உபாதைகள் இருந்தது தெரியவந்தது. ஜெயலலிதா மரணம் குறித்து இரண்டு விதமான போக்கில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்துகிறது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் உடல்நலக்குறைவால் தான் ஜெயலலிதா இறந்தார் என்றும், அவரது மரணம் அரசியலாக்கப்பட்டுள்ளது என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“