அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் வைக்க எதிர்ப்பு! வக்கில் ஆஜராகாததால் மனு தள்ளுபடி

திபதிகள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதால் தள்ளுபடி செய்த உத்தரவை திரும்ப பெறுமாறு மனு தாக்கல் செய்யுங்கள் செய்தால் பரிசீலனைக்கு எடுக்கிறோம் என்றனர்.

ஜெயலலிதாவின் சமாதியில் நினைவிடம் கட்டவும், அரசு அலுவலகம் மற்றும் திட்டங்களில் அவரது புகைப்படம் மற்றும் பெயர் சூட்டுவதை எதிர்த்தும் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், மனுக்களை தள்ளுபடி செய்வதாக தலைமை நீதிபதி பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது . 

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதே போல, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அவரது நினைவாக அரசு திட்டங்களில் அவரின் பெயர் வைக்கப்பட்டது. 

தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்தும், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றமத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது.  அதில் மறைந்த தமிழக முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி. ராமசந்திரன் ஆகியோர்க்கு  சென்னை மெரினா கடற்கரையில் சமாதி அமைக்கபட்டுள்ளது. ஜெயலலிதா நினைவிடத்தில் தற்போதைய அரசு சுமார் 15 கோடி ரூபாய் செலவில், நினைவிடத்தை கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வதிகளின் படியும், உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படி கடற்கரை இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் எந்த வித கட்டுமானங்களை மேற்கொள்ள கூடாது. மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை. இதில் தொடர்ந்து இது போன்ற சமாதிகள் ஏற்பட்டால் அதன் தன்மை பாதிக்கும். கடற்கரை பகுதியை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். மெரினா கடற்கரை பகுதியில் பொதுமக்கள் கூட தடை விதிக்கபட்டுள்ளது. இதற்காக காவல்துறை சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் இங்குள்ள முன்னாள் முதல்வர்கள் சமாதிகளை அங்கிருந்து அகற்றி சென்னை கோட்டூர்புரம் காந்தி மண்டபம் அமைந்துள்ள இடத்தில் வைக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் எனது மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. எனவே உடனடியாக மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் நினைவிடம் மற்றும் சிலையை அகற்ற உத்தரவிட வேண்டும்

சொத்து குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவித்ததால், அவரது புகைப்படத்தை அரசு அலுவலகத்தில் வைப்பதும், அரசு திட்டங்களில் ஜெயலலிதா பெயர், புகைப்படம் இடம் பெறுவது, அரசு செலவில் நினைவிடம் அமைப்பதும் சட்ட விரோதமானது என்று, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பேர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ. செல்வம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதை காரணம் கூறி, மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் . 

இதனையடுத்து பிற்பகல் மனுதரார்கள் சார்பில் முறையீடு செய்யபட்டது. அதில் தள்ளுபடி செய்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் அடுத்த திங்கள் கிழமை சட்டமன்றத்தில் ஜெயலலிதா புகைப்படம் வைக்கபட்டதை எதிர்த்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அந்த வழக்குடன் இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. தள்ளுபடி செய்த உத்தரவை திரும்ப பெற உத்தரவிட கூடாது என வலியுறுத்தபட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்பதை குறித்து தள்ளுபடி செய்த உத்தரவை திரும்ப பெறுமாறு மனு தாக்கல் செய்யுங்கள் செய்தால் பரிசீலனைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close