/indian-express-tamil/media/media_files/0JS1LfQwkPZGDRiUuYQ1.jpg)
ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் நீதிமன்ற உத்தரப்படி பெங்களூருவில் இருந்து மீண்டும் தமிழகம் வருகிறது.
ஜெயலலிதா 1991 முதல் 2016 வரை 6 முறை தமிழ்நாடு முதலமைச்சராக பதவி வகித்தார். ஜெயலலிதா முதல்முறையாக 1991 - 96 முதலமைச்சராக பதவி வகித்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு இவருக்கு எதிராக வெளியானதால், 2001 மற்றும் 2011 காலக்கட்டங்களில் 2 முறை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். பின்னர், மேல்முறையீடு செய்து, மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 28 கிலோ தங்க, வைர நகைகள், 800 கிலோ வெள்ளி பொருட்கள் 6 பெட்டிகளில் கர்நாடக அரசின் கருவூலத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில், ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ஏலம் விடக் கோரி பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த பெங்களூரு உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி பொருட்கள் 6 பெட்டகங்களில் தமிழ்நாடு கொண்டு வரப்படுகிறது. மார்ச் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தமிழக உள்துறைச் செயலாளர் நேரில் ஆஜராகி பெற்றுக் கொள்ளுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த சொத்துக் குவிப்பு வழக்கு கட்டணமாக ரூ.5 கோடியை கர்நாடகாவுக்கு தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என்று பெங்களூரு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம், ஜெயலலிதாவின் 28 கிலோ தங்கம், வைர நகைகள், 800 கிலோ வெள்ளி பொருட்கள் விரைவில் 6 பெட்டகங்களில் மீண்டும் தமிழ்நாடு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.