மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடந்த 17 ஆம் தேதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சொத்து குவிப்பு வழக்கில உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற கூடாது எனவும், சொத்து குவிப்பு வழக்கில் அனைத்து சட்ட விரோத பரிவர்த்தனைகளும் வேதா நிலையத்தில் நடந்துள்ளது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதனால் அதை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது ஒரு தவறான முன் உதாரணமாகிவிடும் எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து நிதித்துறை செயலாளரும், சட்டத்துறை செயலாளரும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனவே வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவது தொடர்பான, அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.