Advertisment

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் முடக்கப்பட்டுள்ளது – வருமான வரித்துறை பகீர்

சொத்துக்களை விடுவிக்க தங்களுக்கு எந்த ஆட்சேபம் இல்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
போயஸ் இல்லம்

போயஸ் இல்லம்

செலுத்த வேண்டிய வரி பாக்கிக்காக, போயஸ் தோட்ட இல்லம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Advertisment

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் சென்னை போயஸ் இல்லமான வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க கோரி டிராபிக் ராமசாமி, எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக பொது நல வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு தொடர்ந்த மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் :

இதையடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் சொத்துகளை நினைவில்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி ஏதும் நிலுவையில் உள்ளதா? வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபனை ஏதும் உள்ளதா? என்பது குறித்து ஜனவரி 24-ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது.

அதில் சென்னையில் உள்ள ஜெயலலிதா குடியிருந்த போயஸ் தோட்ட வீடு,பார்சன் மேனனில் உள்ள ஒரு ஃபிளாட், மந்தைவெளி செயிண்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஒரு சொத்து மற்றும் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் இருக்கும் வீடு ஆகிய சொத்துகளை கடந்த 2007 மற்றும் 2013 ஆண்டுகளில் வருமானவரித் துறை முடக்க பட்டியலில் உள்ளது.

மேலும் வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா சுமார் 16 கோடி ரூபாய் அளவில் பாக்கி வைத்திருந்தாவும், அதில் 6 கோடி ரூபாய் செலுத்திவிட்டதாகவும் இன்னும் 10 கோடி ரூபாய் அளவிற்கு பாக்கி உள்ளதாக வருமான வரித்துறையின் துணை ஆணையர் ஜி. சோபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட

அறிக்கையில் தெரிவிக்கபட்டது.

அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள் இன்று வருமான வரி துறை தாக்கல் அறிக்கை முழுமையாக இல்லை என தெரிவித்தனர்.அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண் தற்போது நினைவிடம் அமைப்பதற்கு முன்னர் பொதுமக்களிடம் கருத்து கேட்கபட்டு வருவதாக தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள் பொதுமக்களிலிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்னர் சமூக பாதிப்பு மதிப்பிடு நடத்தபட்டதா? அப்படி என்றால் அதற்கு உத்தரவிட்டாது யார்? அந்த செய்யாமல் தற்போது பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த முடியுமா? என தமிழக அரசு தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் இது தொடர்பாக உரிய பதிலை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது தலைமை வழக்கறிஞர் போயஸ் தோட்டம் வீட்டை அரசு கையகபடுத்தும் முன்னர் இழப்பீடு தொகையை அளிக்கும் என்றார்.அப்போது வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களுக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை முழுமையாக செலுத்திவிட்டால் முடக்க பட்டியலில் சொத்துக்களை விடுவிக்க தங்களுக்கு எந்த ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், இழப்பீடு தொகையை அரசு யாரிடம் வழங்குவீர்கள் என தலைமை வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த தலைமை வழக்கறிஞர் ஏற்கனவே போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதில் இரண்டு பேர் ( திபா, தீபக் பெயர் குறிப்பிடாமல்) உரிமை கோரி தொடர்ந்த சிவில் நிலுவையில் உள்ளது என தெரிவித்தார்

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், வருமான வரித்துறை சார்பில் இன்று தாக்கல் செய்த அறிக்கை முழுமையாக இல்லை எனவே முழுமையான தெளிவான மற்றும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரி துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே போல் போயஸ் தோட்ட வீட்டை தமிழக அரசு கையப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? கையகப்படுத்தினால் அந்த இழப்பீட்டு தொகையை யாரிடம் அளிக்கபடும் என்பது உள்ளிட்ட விரிவான பதிலை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் அடுத்த விசாரணை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Jayalalithaa Poes Garden
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment