முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாளிடம் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீர பெருமாள், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் நான் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு அதிகாரியாக இல்லை.” என்று கூறினார்.
கொடநாடு, கொலை, கொள்ளை வழக்கு -முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள் விசாரணைக்காக கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் முதல் முறையாக ஆஜரானார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி சிறப்பு விசாரணை குழு விசாரணையை தீவிரபடுத்தி உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக பல்வேறு நபர்களிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கடந்த வாரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாளை விசாரணைக்கு ஆஜராக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.மேலும் இன்று மார்ச் 11 ஆம் தேதி நேரில் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
குறிப்பாக, கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தை தொடர்ந்து அப்போது யார், யாரிடம் செல்போனில் பேசப்பட்டது என்பது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அலுவலர் வீர பெருமாள் கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/03/11/veeraperumal-3-938012.jpeg)
கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாளிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவடைந்த பிறகு வீரபெருமாள் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டும் தான் நான் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தேன். எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அதிகாரியாக இல்லை.
வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன். விசார்ணையில் வழக்கு தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ளேன். கேள்விகள் என்னவென்று தெரிவிக்க முடியாது.
/indian-express-tamil/media/media_files/2025/03/11/veeraperumal-2-482327.jpeg)
ஊடகங்களில் தவறாக வந்த செய்தி வருத்தம் அளிக்கிறது.நான் முன்னாள் முதலமைச்சர் அம்மாவிற்கு (ஜெயலலிதா) மட்டும் பாதுகாவலராக பணிபுரிந்தேன்.
முன்னாள் முதலமைச்சர் அம்மாவிற்கு கடந்த 1991 மற்றும் 2002 முதல் 2016 வரைக்கும் முன்னாள் முதல்வர் அம்மாவுடன் இருந்தேன்.
முதலமைச்சர் அம்மா மறைவுக்கு பிறகு நான் எந்த முதல்வருக்கும் பாதுகாப்பு பிரிவில் பணிபுரிய விரும்பவில்லை. பின்னர், வேறு பிரிவுக்கு சென்று பணியிலிருந்து ஓய்வு அடைந்து விட்டேன்.” என்று வீர பெருமாள் கூறினார்.