ஜெயலலிதா ஒரு சிறந்த நிர்வாகி… ஜெவின் 71வது பிறந்தநாளில் பிரதமர் மோடி புகழ் அஞ்சலி!

பாஜக தலைவர்களும் தங்களின் புகழ் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

By: Updated: February 24, 2019, 11:37:12 AM

Jayalalitha’s 71st Birth Anniversary : அம்மா என்று தமிழக மக்களால் பேரன்புடன் அழைக்கப்பட்டவர் செல்வி ஜெயலலிதா. 6 முறை தமிழக முதல்வராக பொறுப்பு வகுத்து  ஏழை எளிய நெஞ்சங்களில் என்றும் நீங்காத இடம் பிடித்த ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் இன்று.

இந்நாளை கொண்டாட அம்மையார் இன்று உயிருடன் இல்லை. 2016ம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காராணமாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். ஆனாலும் அவரின் அழியாப் புகழையும் அன்பையும் நெஞ்சில் தாங்கி நிற்கும் தொண்டர்கள் மற்றும் பிறகட்சி தலைவர்களும் கூட ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று அவரை நினைவுகூறி வருகின்றனர்.

Jayalalitha’s 71st Birth Anniversary – பிரதமர் உள்ளிட்டோர் புகழ் அஞ்சலி

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி பாஜகவும் அதிமுகவும் கூட்டணியில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஜக தலைவர்களும் தங்களின் புகழ் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி ஜெயலலிதாவின் பிறந்தநாள் குறித்து ட்வீட் செய்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பாஜக பிரமுகர் எச்.ராஜா உள்ளிட்டோரும் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளனர்.

மோடியின் புகழ் அஞ்சலி

தமிழக மக்களின் வளர்ச்சிகாக ஜெயலலிதா ஆற்றிய பங்களிப்புகள் என்றும் நினைவில் கொள்ளப்படும்.  சிறந்த நிர்வாகியாகவும், திறமைப்படைத்த தலைவராகவும் பணியாற்றிய அவர் கொண்டு வந்த திட்டங்களால் எண்ணற்ற ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர் என்று மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டார்.

மேலும் படிக்க : பாஜக தலைவர்களும் தங்களின் புகழ் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Jayalalithas 71st birth anniversary bjp pays tributes in social media

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X