மாபெரும் அரசியல் செல்வாக்குடன் விளங்கிய ஜெயேந்திரர்!

காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திர சரஸ்வதியின் பிரிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம், சாதார மக்களில் தொடங்கி, பிரதமர் வரை அனைவரும் ஜெயேந்திரன் மரணம் குறித்து பேசுவது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

இதுவரை இருந்த காஞ்சி மடாதிபதிகளிலேயே, ஜெயேந்திரர் சரஸ்வதி தான் மாபெரும் அரசியல் செல்வாக்குடன் விளங்கியுள்ளார். அதற்கான சான்றுகள் இதோ…

சந்திரசேகரேந்திர சரஸ்வதி, ஜெயேந்திரரை 19 வயதில் மடத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்பு ஜெயேந்திரர் காஞ்சி மடத்தின், இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கும் பின்பு, தமிழ்தாய் வாழ்த்து சர்ச்சையில் சிக்கிய விஜயேந்திரரும் மடத்தில் வந்து சேர்ந்தார். இவர்கள் மூவரும் காஞ்சி மடத்தின் மகாம பெரியவா, பெரியவா, பால பெரியவா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டனர்.

முதலில் மகா பெரியவர் இறந்தது, ஜெயேந்திரர் 69 ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பின்பு விஜேந்திரர் இளைய மடாதியாக இருந்து வருகிறார். தற்போது ஜெயேந்திரமும் இறந்து விட்டதால் அவருக்கு அடுத்தப்படியாக மடத்தின் பீடாதிபதி யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஜெயேந்திரர், பீடாதிபதியாக இருந்த சமயத்தில் பல்வேறு சர்ச்சைகள் அவரை சுற்றி வலம் வந்தனர். இருப்பினும், அவருக்கான செல்வாக்கு பக்தர்கள மத்தியிலும், தலைவர்கள் மத்தியிலும் ஒருபோது குறைந்ததில்லை. மடாதிபதிகளை மக்கள் ஆன்மிகவாதிகளாகப் பார்க்கிறார்கள்.

ஆனால் அதே சமயம் இந்த ஆன்மிகவாதிகள் அவர்களின் உள்ளங்களில் இடம் பிடிப்பது மிகவும் அரிதான ஒன்று. அந்த வகையில், ஜெயேந்திரன் இனம், மொழிகளை தாண்டி அனைவரின் உள்ளங்களிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்து சென்றுள்ளார். ஆன்மிக வட்டாரத்தில், இவரின் மரணம் பெரும் கேள்விகளை எழுப்பி வருகிறது.

அரசியல் செல்வாக்கில் ஜெயேந்திரர்:

>1954ல் ஜெயேந்திர சரஸ்வதி மடத்தின் இளைய பீடாதிபதியானர்.

>1994 ல் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மறைவுக்கு பின்பு, ஜெயேந்திரர், காஞ்சின் மடத்தின் 69 ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

>துணிச்சல் மிக்க ஜெயேந்திரர், தனது குரு சந்திரசேகரேந்திர இருக்கும் போதே, தனக்கு இளைய மடாதிபதி வேண்டும் என்று விஜேந்திரரை நியமித்துக் கொண்டார்.

>அப்போது, அவரை சுற்றி மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

>1987 ஆகஸ்ட் 23ஆம் தேதி, ஜெயேந்திரர் யாரிடமும் சொல்லாமல் மடத்தை விட்டு வெளியேறினார்.

>மூன்று நாட்கள் பிறகு கர்நாடக மாநிலத்தின் தலைக்காவிரியில் ஜெயேந்திர சரஸ்வதி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

> அதே ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி ஜன கல்யாண், ஜன ஜாக்ரண் என்ற புதிய இயக்கங்களை ஆரம்பித்தார் ஜெயேந்திரர்.

>காஞ்சி சங்கர மடத்திற்கு குடியரசுத் தலைவர் போன்ற உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள் வருவது புதிததல்ல. இருப்பினும்,  1998ல் மத்தியில் பா.ஜ.க. அரசு ஏற்பட்ட பிறகு இது பெரிய அளவில் அதிகரித்தது.

>தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்கள் ஜெயேந்திரரை நேரில் சந்தித்து ஆசி பெறுவதை வழக்கமாக கடைப்பிடிக்க ஆரம்பித்தனர்.

>2001-2006 காலகட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியின் துவக்க ஆண்டுகளில் தமிழக அரசில் பெரும் செல்வாக்குடன் ஜெயேந்திர சரஸ்வதி விளங்கினார்.

>கோவில் சொத்துக்களை பாதுகாப்பது தொடர்பான மாநில அளவிலான குழுவின் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார்

>ஜெயலலிதாவில் தொடங்கி, மோடி, முக்கிய அமைச்சர்கள் என பலர் ஜெயேந்திரரை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தனர்.

> அதன் பிரதிபலிப்பு தான் அவரின் இறப்புக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கொடுத்த முக்கியத்துவம்.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close