Advertisment

காஞ்சி மட வளாகத்தில் ஜெயேந்திரர் உடல் அடக்கம் : வியாழக்கிழமை காலையில் இறுதி அஞ்சலி

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jayendra_Saraswathi 2

Jayendra_Saraswathi 2

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் இன்று காலை 9.05 மணியளவில் மரணம் அடைந்தார். அவர் உடல் பக்தர்கள் அஞ்சலி செலுத்த வசதியாக மண்டப்பத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. மடத்தில் உள்ளவர்கள் மந்திரம் ஓதி வருகின்றனர். அதன் பின்னரே பக்தர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

Advertisment

இந்நிலையில் ஜெயேந்திரர் மரணத்துக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன் LIVE UPDATE :

மாலை 6.00 : ஜெயேந்திரருக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 5.00 : ஜெயேந்திரர் மறைவுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மாலை 4.00 : ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வான டிடிவி தினகரன் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்று ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தினார்.

மாலை 3.30 : தே.மு.திக. பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் காஞ்சிபுரம் சென்று ஜெயேந்திரருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பிற்பகல் 1.30 : ஜெயேந்திரர் மறைவையொட்டி காஞ்சி மடத்திற்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார், பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன். அங்கு நிருபர்களிடம் பேசுகையில், ‘ஆன்மீகப் பணியில் மட்டுமல்லாது கல்வி மற்றும் மருத்துவப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர் ஜெயேந்திரர். எந்த மதத்தையும் நிந்தித்துப் பேசாதவர். உண்மையான மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்தார்’ என்றார் தமிழிசை.

பகல் 12.40 : ‘இந்து மதத்தை காக்கவும் பரப்பவும் தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் ஜெயேந்திரர். ராமர் கோவில்-பாபர் மசூதி பிரச்னை எழுந்தபோது இரு தரப்பையும் சந்தித்து பிரச்னை சுமூகமாக தீர முயற்சி எடுத்தார். அவரது மறைவுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என திருநாவுக்கரசர் கூறினார்.

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்தார்.

பகல் 12.35 : இன்று மாலையில் இருந்து ஜெயேந்திரருக்கு பொதுமக்களும் பக்தர்களும் அஞ்சலி செலுத்துவார்கள் என மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் கூறினார். ‘நாளை (29-ம் தேதி) காலை 7.30 மணி முதல் இறுதிச் சடங்குகள் நடைபெறும். காஞ்சி மடத்தின் வளாகத்தின் அவரது குருவான மகா பெரியவர் சமாதி அருகே உடல் அடக்கம் செய்யப்படும். அடுத்த பீடாதிபதி யார்? என்கிற கேள்வியே இல்லை. விஜயேந்திரர் அந்தப் பொறுப்பை ஏற்பார். அதற்கு தனி அறிவிப்பு எதுவும் தேவையில்லை’ என்றும் சுந்தரேச ஐயர் கூறினார்.

பகல் 12.30 : காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்டவர் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பகல் 12.30 : சங்கர மடத்தின் உள்ளேயே நாளை (பிப்ரவரி 29) காலையில் ஜெயேந்திரரின் உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

பகல் 12.30 : காஞ்சி மடத்தின் உறுப்பினர்களும் பக்தர்களும் அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.

பகல் 12.15 : பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ஜெயேந்திரரின் கல்விப் பணியை நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

பகல் 12.00 : திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் அறிக்கை விட்டிருக்கிறார்.

பகல் 11.30 : தேமுதிக தலைவர் விஜயகாந்த் இரங்கல் தெரிவித்தார்.

 

பகல் 11.20 : மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.

பகல் 11.15 : திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி இரங்கல் தெரிவித்தார்.

பகல் 11.10 : பிரதமர் நரேந்திரமோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்தார்.

காலை 9.30 : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ட்விட்டரில் அஞ்சலி

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment