/indian-express-tamil/media/media_files/0MX0wUg6CiMlMYxZgymv.jpg)
கோவையில் நகைப் பெட்டிகள் தயாரிக்கும் கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.
Coimbatore | Fire Accident: கோவை மதுக்கரை அறிவொளி நகர் பகுதியில் நகைகளுக்கு அட்டை பெட்டி தயாரிக்கும் தனியார் கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு சுமார் 130-க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் உணவருந்த வெளியே வந்த நிலையில், கம்பெனிக்குள் தீ பற்றி உள்ளது. இதனை அறிந்த தொழிலாளர்கள் அதனை அணைக்க முயன்ற போது தீ மளமளவென பரவியுள்ளது. இருப்பினும், தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர்.
இதனையடுத்து கோவைப்புதூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின் கசிவால் தீ பற்றியதாக கூறப்படும் நிலையில் தீயை அணைத்த பின்பே தீ பற்றியதற்கான காரணங்களும் சேதமடைந்த பொருட்களின் மதிப்பும் தெரியவரும்.
இந்த கம்பெனியை சுற்றி வேறு சில கம்பெனிகளும் இருப்பதால் அவர்களும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.
— Indian Express Tamil (@IeTamil) February 9, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.