Advertisment

தாம்பரம் நகைக் கடை கொள்ளை.. 3 சிறார்கள் சிக்கியது எப்படி?

வடமாநில இளைஞர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் அவர்களின் தகவல்களை போலீஸ் செயலியில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும்

author-image
WebDesk
New Update
Jewellery stolen from showroom near Tambaram

தாம்பரம் அருகேயுள்ள நகைக் கடையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்கள் ஆவார்கள்.

தாம்பரம் அருகே பிரபல நகைக் கடையில் பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 வடமாநில சிறுவர்களை கைதுசெய்தனர்.

தாம்பரம் அருகேயுள்ள பிரபல நகைக் கடையில் ரூ.1கோடிக்கும் அதிகமான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் அஸ்ஸாம் மாநிலம் கஹகாத்தியை சேர்ந்த மூன்று சிறார்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

இந்த மூன்று சிறார்களும் அருகில் இருந்த ஜூஸ் உள்ளிட்ட கடைகளில் வேலை பார்த்துவந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு ஒரு சிறுவன் நகை்கடைக்குள் புகுந்து ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்களை திருடியுள்ளான்.

அந்த காணொலிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதையறியாத சிறுவன், போலீசார் விசாரணை நடத்தியபோது ஏதுமறியா பச்சைக் குழந்தை போல் அங்குபோய் பார்த்துள்ளான்.

ஏற்கனவே அவன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை கைப்பற்றி வைத்திருந்த போலீசார் அந்தச் சிறுவனை லபக் என பிடித்துக்கொண்டனர்.

பின்னர் சிறுவனிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் எப்படி கொள்ளையடித்தேன், எவ்வளவு கொள்ளையடித்தேன் இதற்கு உதவியவர்கள் யார் யார் என்பதெல்லாம் குறித்து புட்டு புட்டு வைத்தார்.

இதையடுத்து போலீசார் அவனின் கூட்டாளிகள் மற்ற இரு சிறுவர்களையும் கைதுசெய்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் போலீஸ் கமிஷனர், “கொள்ளையில் ஈடுபட்ட சிறார்கள் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமாநில இளைஞர்களை பணியில் அமர்த்தும் கடை உரிமையாளர்கள் அவர்களின் தகவல்களை போலீஸ் செயலியில் பதிவு செய்துக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment