ஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு

ஜெயலலிதா ஆடியோ வெளியானது. அப்பல்லோ சிகிச்சையில் இருந்தபோது பேசிய பதிவு இது! ஆறுமுகசாமி ஆணையத்தில் இதை மருத்துவர் சிவகுமார் ஒப்படைத்தார்.

ஜெயலலிதா ஆடியோ வெளியானது. அப்பல்லோ சிகிச்சையில் இருந்தபோது பேசிய பதிவு இது! ஆறுமுகசாமி ஆணையத்தில் இதை மருத்துவர் சிவகுமார் ஒப்படைத்தார். இதன் LIVE UPDATES

ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சை இன்னும் ஓயவில்லை. முன்னாள் முதல்வரின் மரணத்தில் நடந்தது என்ன? என பலரும் கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரையும் அழைத்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. சசிகலா உறவினர்களில் ஒருவரும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவருமான டாக்டர் சிவகுமார் இன்று (மே 26) நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆடியோ ஒன்றை சமர்ப்பித்தார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தபோது பேசிய ஆடியோ பதிவு அது! அதில் ஜெயலலிதா மூச்சுத் திணறல் மற்றும் இருமலுடன் பேசியது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவை சிலர் அடித்துக் கொன்றுவிட்டார்கள் என்றும், மரணமடைந்த நிலையில் அவரை அப்பல்லோவுக்கு அழைத்து வந்தார்கள் என்றும் பலரும் பரப்பி வருகிற வதந்திகளுக்கு பதிலாக இந்த ஆடியோ சமர்ப்பிக்கப்படுவதாக தெரிகிறது. மேலும் ஜெயலலிதா ஏற்கனவே உடல்நலப் பிரச்னைகளுடன் இருந்ததை உறுதிப்படுத்தும் ஆவணமாகவும் இதை கருதுகிறார்கள்.

அப்பல்லோவில் ஜெயலலிதா ஜூஸ் அருந்துவதாக ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வீடியோ ஒன்றை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆடியோ வெளியாகி இருப்பது அதிமுக.வினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஜெயலலிதா ஆடியோ வெளியானது. அப்பல்லோ சிகிச்சையில் இருந்தபோது பேசிய பதிவு இது! ஆறுமுகசாமி ஆணையத்தில் இதை மருத்துவர் சிவகுமார் ஒப்படைத்தார். இதன் LIVE UPDATES

5pm: தூத்துக்குடி துப்பாக்கி சூடு மற்றும் அதன் மூலமாக அரசுக்கு எழுந்திருக்கும் அதிருப்தியை சமாளிக்க இப்போது இந்த ஆடியோ வெளியாகி இருப்பதாக விமர்சனங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த ஆடியோவை இப்போது விசாரணை ஆணையத்தில் சமர்பித்தது சசிகலா தரப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா ஆடியோ உரையாடல் :

4.20 pm : ஜெயலலிதா ஆடியோ பதிவு உரையாடல் விவரம் :

ஜெயலலிதா: எனக்கு ரத்த அழுத்தம் எப்படி இருக்கிறது?

மருத்துவர் அர்ச்சனா: 140/80

ஜெயலலிதா: இது எனக்கு நார்மல்தான்.

ஜெயலலிதா: திரையரங்கில் முதல்வரிசையில் இருக்கும் ரசிகன் விசிலடிப்பதைப்போல் எனக்கு மூச்சுத் திணறுகிறது.

ஜெயலலிதா: பதிவு செய்வது சரியாக கேட்கிறதா?

மருத்துவர் சிவக்குமார்: சிறப்பாக இல்லை; அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன்.

ஜெயலலிதா: எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.

4.15pm: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேருவதற்கு முன்பு தினந்தோறும் எடுத்துக்கொண்ட உணவு வகைகள் தொடர்பாக ஜெயலலிதாவே கைப்பட எழுதிய உணவுப் பட்டியலை ஆறுமுகசாமி ஆணையத்தில் டாக்டர் சிவகுமார் இன்று தாக்கல் செய்தார்.

4PM: ஜெயலலிதா 2016 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை எடுத்துக்கொண்ட சிகிச்சைகள் குறித்து கைப்பட எழுதிய ஆவணம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

Jeyalalitha Audio At Apollo

ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய தனது உணவுப் பட்டியலும் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

மாலை 4.00 : ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது பேசிய ஆடியோ வெளியானது. ஜெயலலிதா தனது கைப்பட எழுதிய தனது உணவுப் பட்டியலும் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையும் ஆணையம் வெளியிட்டது.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close