Jeyalalitha Birthday Samabandhi bhojana : பொதுத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நிறுத்த விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன என்ற அறிவிப்பை அதிமுக அறிவித்தது.
ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
இதனைத் தொடர்ந்து நேற்று காலை 10:30 மணி அளவில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.பி. உதயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
Jeyalalitha Birthday Samabandhi bhojana - நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பாராளுமன்றத்தில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான முடிவினை கட்சி எடுத்துவிட்டதாகவும், கடந்த முறை தேர்தலில் இவர் வெற்றி பெற்றது போல் இம்முறையும் மகத்தான வெற்றியை அதிமுக பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, அவைத்தலைவர் மதுசூதனன், கே.பி. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த கூட்டத்தில் வரும் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஜெ. வின் பிறந்தநாளை ஒட்டி, இளைஞர் பெருவிழாவை கிராமங்கள் தோறும் நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சட்ட ரீதியான அனுமதி பெற்று தமிழகம் எங்கும் ஜெயலலிதாவின் சிலைகள் வைக்கப்படும் என்றும், சமபந்தி போஜனம் நடத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியை பசிப்பிணி தீர்க்கும் நாளாக கொண்டாடவும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் வருகின்ற 8ம் தேதி கூடுகிறது. அன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : ஒரே நாளில் 250 விருப்ப மனுக்கள்