ஜார்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சர் ஜகர்நாத் மஹ்தோவின் உடல்நிலை திடீரென மோசமடைந்து.
இதனையடுத்து, ஜார்க்கண்ட் தலைநகர் பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், விமானம் மூலம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு வருகைதந்தார்.

மஹ்தோவை விமானம் மூலம் ஏற்றிச் செல்வதற்கு முன் அவரை முதல்வர் ஹேமந்த் சோரன் சந்தித்தார்.
மஹ்தோவுக்கு நுரையீரல் பிரச்னைகளின் இருக்கிறது, கொரோனா தொற்றுநோயின் போது அவரது நுரையீரல் மோசமாக பாதிக்கப்பட்டது.
இதனால், சென்னையில் எம்.ஜி.எம்.மில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்திருந்தனர்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர் சிகிச்சைக்காக சென்னை எம்.ஜி.எம்.முக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் பாராஸ் மருத்துவமனையின் டாக்டர் நிதீஷ் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil