Advertisment

ஜார்கண்ட் கல்வி அமைச்சர் சென்னையில் மரணம்: ஸ்டாலின் இரங்கல்

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஜகர்நாத் மக்தோ சிகிச்சை பலனின்றி காலமானார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jharkhand Education Minister Jagarnath Mahto Dies At 56 In Chennai Tamil News

Jharkhand education minister Jagarnath Mahto passes away Tamil News

Jharkhand education minister Jagarnath Mahto passed away during treatment at a Chennai hospital Tamil News: ஜார்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் ஜகர்நாத் மக்தோ (வயது 56). கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சுவாச கோளாறு காரணமாக நுரையீரலில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisment

கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் அவரது உடல்நலம் தேறியதையடுத்து தனது அன்றாட பணிகளை மேற்கொண்டு வந்தார் ஜகர்நாத் மக்தோ.

இதற்கிடையே, கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி அவருக்கு திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. உடனே அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கொண்டு வரப்பட்டு மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இரங்கல்

ஜார்கண்ட் அமைச்சர் மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஜார்கண்ட் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஜகர்நாத் மக்தோ, சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பதிவிட்டு இருந்தார்.

அஞ்சலி

அமைச்சரின் மறைவு செய்தி அறிந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவமனைக்கு நேற்று நேரில் சென்றார். அங்கு அமைச்சர் ஜகர்நாத் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அவருடைய உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்து கொடுத்தார். இதற்கிடையே, அவருடைய மறைவுக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

"நிவர்த்தி செய்ய முடியாத இழப்பு. இன்று ஜார்க்கண்ட் அதன் பிரபலமான மற்றும் கடின உழைப்பாளி தலைவர்களில் ஒருவரை போராட்டங்களில் பங்கேற்று இழந்து விட்டது. மதிப்பிற்குரிய ஜகர்நாத் மஹ்தோ ஜி சென்னையில் சிகிச்சையின் போது காலமானார். இறந்த ஆன்மாவிற்கு கடவுள் அமைதியையும், பிரிந்த குடும்பத்திற்கு வலிமையையும் தரட்டும்." என்று முதல்வர் சோரன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜார்கண்ட் அரசு ஏப்ரல் 6 முதல் அமைச்சர் ஜகர்நாத் மக்தோவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு நாட்களுக்கு துக்கம் அறிவித்துள்ளது. இந்த நாட்களின் போது அதிகாரப்பூர்வ விழா எதுவும் நடைபெறாது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ஜகர்நாத் மக்தோ, கிரிதி மாவட்டத்தில் உள்ள தும்ரியில் இருந்து 4 முறை எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Jharkhand Jharkhand Cm Hemant Soren
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment