ஜப்பான் சர்வதேச கோ-ஆபிரேஷன் நிறுவனம் (JICA) சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்காக சுமார் ரூ. 4,710 கோடி (ஜப்பானிய யென் 73,000 மில்லியன்) ஜப்பானிய உத்தியோகபூர்வ மேம்பாட்டு உதவி (ODA) கடனை வழங்க இந்திய அரசாங்கத்துடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா மற்றும் JICA இந்தியாவின் தலைமைப் பிரதிநிதி சைட்டோ மிட்சுனோரி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை வழங்குவதற்காக தற்போதுள்ள மெட்ரோ நெட்வொர்க்குகளை ஒன்றோடொன்று இணைப்பதையும், நகரத்தில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களைத் தீர்ப்பதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
JICA இந்தியா அலுவலகத்தின் தலைமைப் பிரதிநிதி, “சென்னை மெட்ரோ திட்டம் முடிந்ததும், குடிமக்களுக்கு வசதியான, நம்பகமான மற்றும் பசுமையான போக்குவரத்தை உறுதி செய்யும். JICA சென்னை மெட்ரோ ரெயிலுடன் அதன் கூட்டாண்மை குறித்து பெருமிதம் கொள்கிறது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால், சாலைப் போக்குவரத்திலிருந்து பொதுப் போக்குவரத்திற்கு மாற்றத்தை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் வாகன மாசு மற்றும் போக்குவரத்து விபத்துக்களை நிவர்த்தி செய்வதில் சென்னை மெட்ரோ முக்கிய பங்கு வகிக்கும்.
சென்னை மெட்டோ ரயில் செயல்பாட்டுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும், குடிமக்களுக்கு வசதியான போக்குவரத்து முறையை வழங்குவதற்கும் புதிய கடன் ஆதரவளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“