Advertisment

சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக இருந்த ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் தீவிரவாதி கைது

JMB Terror Outfit leader Asadullah arrested in Chennai: சென்னையில் கட்டிட தொழிலாளியாக தலைமறைவாக இருந்த ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் என்ற அமைப்பைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்ற தீவிரவாதியை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
JMB Terror Outfit leader arrested, Terrorist Asadullah arrested in Chennai, ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ், சென்னையில் தீவிரவாதி அசதுல்லா கைது, NIA Team arrested terrorist, Terrorist arrested in Chennai

சென்னை நீலாங்கரையில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை போலீசார் உதவியுடன் திடீரென ஒரு வீட்டை முற்றுகையிட்டு அங்கே தங்கி இருந்த ஒரு நபரை கைது செய்தனர். புலனாய்வு முகமை அதிகாரிகளின் விசாரணையில், அந்த நபர் மேற்கு வங்கம் மாநிலம், பர்த்வான் பகுதியைச் சேர்ந்த அசதுல்லா ஷேக் என்கிற ராஜா என்பதும் அவர் ஜமாத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பைச் சேர்ந்தவரென்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிராவதி இஜாஸ் அஹமதுவை கொல்கத்தா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். இஜாஸ் அஹமது நார்ட் பெங்காலை தேர்வு செய்து இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பின் செயல்பாடுகளுக்கு புதிய அடித்தளம் அமைப்பவராக இருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜமாத் உல் பங்களாதேஷ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அசதுல்லா ஷேக் சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை நீலாங்கரையில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்த அசதுல்லா ஷேக்கை கைது செய்தனர். அந்த வீட்டில் அசதுல்லா 10 மாதங்களாக தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அசதுல்லா கட்டிட தொழிலாளியாக வேலை செய்து தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. அசதுல்லாவை கைது செய்த தேசிய புலனாய்வு முகை அதிகாரிகள் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஐதராபாத்திலுள்ள தேசிய புலனாய்வு முகமை மண்டல தலைமை அலுவலகத்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

Chennai Tamilnadu Terrorist Bangladesh Terrorism
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment